/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒப்படைவு இடத்திற்கு பட்டா ஆதிதிராவிட மக்கள் மனு
/
ஒப்படைவு இடத்திற்கு பட்டா ஆதிதிராவிட மக்கள் மனு
ADDED : பிப் 21, 2025 05:02 AM

கள்ளக்குறிச்சி: உதயமாம்பட்டு கிராம எல்லையில், ஒப்படைவு வழங்கப்பட்ட இடத்திற்கு பட்டா கேட்டும், போலி ஆவணம் மூலம் இடத்தை பெற முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:
வேளானந்தலை சேர்ந்த ஆதிதிராவிடர், அருந்ததியர் சமுதாய மக்கள் 96 பேருக்கு, கடந்த 2004ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் உதயமாம்பட்டு கிராம எல்லையில் வீட்டுமனை ஒப்படைவு வழங்கப்பட்டது. ஒப்படைவு பெற்றவர்களில் சிலர் மட்டுமே வீடு கட்டியுள்ளனர்.
இந்நிலையில் சிலர் போலி ஆவணம் தயார் செய்து, எங்களை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். மேலும், இந்த இடத்தை தகுதியற்ற மாற்று நபர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஏற்கனவே அரசால் ஒப்படைவு வழங்கப்பட்ட 96 பயனாளிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும். மேலும், போலி ஆவணங்களை ஏற்படுத்தி கொடுத்த நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.