/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளம் பெண் தற்கொலை போலீஸ் விசாரணை
/
இளம் பெண் தற்கொலை போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 01, 2025 04:54 AM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் களைக்கொல்லி மருந்து குடித்து இளம் பெண் இறந்தார்.
கல்வராயன்மலை, தேக்குமரத்துவளவு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும்; எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் மகன் தங்கதுரை 28; என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில், அப்பெண் 2 மாத கர்ப்பமானார். இதனால், தங்கதுரை, அப்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் நேற்று இரவு வீட்டில் வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து இறந்தார்.
தகவலறிந்த கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, அந்த இளம்பெண் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், கரியாலுார் போலீசார் வழக்குப் பதிந்து, தங்கதுரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.