/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 26, 2024 07:38 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலியோ சொட்டு மருந்து அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், நகர ஆரம்பு சுகாதார நிலையம் சார்பில் உழவர் சந்தை, பஸ் நிலையம், மந்தைவெளி கலெக்டர் அலுவலகம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் துண்டு பிரசுரம் வழங்கியும், ஆட்டோ மூலம் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டும் பிரசாரம் செய்யப்பட்டது.
ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் முத்துசாமி, துவாரகா, சசிகுமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் ராமலிங்கம் பங்கேற்றார்.
கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராபின்சன், கள்ளக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி துண்டு பிரசுரங்களை வழங்கி ஆட்டோ அறிவிப்பு வாகனத்தை துவக்கி வைத்தனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.