/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அம்பேத்கர் நினைவு நாள் ; அரசியல் கட்சியினர் மரியாதை
/
அம்பேத்கர் நினைவு நாள் ; அரசியல் கட்சியினர் மரியாதை
அம்பேத்கர் நினைவு நாள் ; அரசியல் கட்சியினர் மரியாதை
அம்பேத்கர் நினைவு நாள் ; அரசியல் கட்சியினர் மரியாதை
ADDED : டிச 08, 2025 05:38 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் நினைவு நாளையாட்டி அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க.,- காங்., -வி.சி., கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க., நகர செயலாளர் சுப்ராயலு, மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க.; கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பாபு, நகர செயலாளர் பாபு, மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
த.வெ.க.; கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட இணை செயலாளர் ராமு, மாவட்ட பொருளார் ஜவகர், துணை செயலாளர் கனிமொழி, நகர செயலாளர் ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

