/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவியை காணவில்லை கைதி புகார்
/
மனைவியை காணவில்லை கைதி புகார்
ADDED : டிச 26, 2024 04:30 AM
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அடுத்த சித்தலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் மனைவி அலமேலு, 35. வெள்ளையன், 2012ல் நடந்த குற்ற வழக்கில் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் உள்ளார்.
இவர், காவல் துறைக்கு கோரிக்கை மனு அளிப்பது தொடர்பாக, மனைவி அலமேலுவை போனில் தொடர்பு கொண்டார்; அலமேலு பேசவில்லை.
சந்தேகமடைந்த வெள்ளையன், தன் சகோதரர் ஆண்டவன் என்பவரிடம் தன் மனைவி குறித்து விசாரித்தார்.
'இரு வாரங்களாக அலமேலுவை காணவில்லை, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை' என அவர் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, காணாமல் போன மனைவியைக் கண்டுபிடித்து தரக்கோரி, சிறையில் உள்ள வெள்ளையன், போலீசாருக்கு புகார் அளித்தார்.
வரஞ்சரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

