
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்; பாம்பு கடித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கான நிவாரண நிதி காசோலையை மணிகண்ணன் எம்.எல்.ஏ., வழங்கினர்.
உளுந்துார்பேட்டை அடுத்துள்ள எல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் விநாயகமூர்த்தி, 23; பட்டதாரி. இவர் விவசாய நிலத்திற்கு சென்ற போது பாம்பு கடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வழியில் இறந்தார்.
உயிரிழந்த விநாயகமூர்த்தி குடும்பத்திற்கு முதல்வர் பொது நிதியிலிருந்து அறிவித்த 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மணிகண்ணன் எம்.எல்.ஏ., குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். உளுந்துார்பேட்டை தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் சுதாகர், வருவாய் ஆய்வாளர் வனிதா, வி.ஏ.ஓ., பவுல்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.