ADDED : அக் 13, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஏமப்பேரை சேர்ந்த பார்த்திபன் மகன் மகேந்திரன், 27; செல்லன் மகன் முனியன், 24; ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, 210 கிராம் கஞ்சா மற்றும் ரூ.15,500 பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், பிச்சமுத்து மகன் வின்சென்ட் என்பவர் மீது வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.