/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நில அனுபவ உரிமை அடிப்படையில் பட்டா கேட்டு பொதுமக்கள் கோரிக்கை
/
நில அனுபவ உரிமை அடிப்படையில் பட்டா கேட்டு பொதுமக்கள் கோரிக்கை
நில அனுபவ உரிமை அடிப்படையில் பட்டா கேட்டு பொதுமக்கள் கோரிக்கை
நில அனுபவ உரிமை அடிப்படையில் பட்டா கேட்டு பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஆக 22, 2025 10:10 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நில அனுபவ உரிமை அடிப்படையில் பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் மற்றும் பொட்டியம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;
இந்து மலையாளி பழங்குடியினர் மற்றும் இஸ்லாமியர் சமூகத்தை சேர்ந்த நாங்கள், பொட்டியம் கிராம எல்லையில் உள்ள தரிசு நிலத்தை அனுபவம் செய்து வருகிறோம்.
நிலத்தில் இருந்த முள் மற்றும் கல்மண்களை திருத்தம் செய்து, விவசாயம் செய்கிறோம். இதற்கான அனுபவ உரிமை வாய்தா ரசீதும் அரசுக்கு செலுத்துகிறோம். இந்நிலையில், நாங்கள் அனுபவித்து வரும் நிலத்தை அபகரிக்கும் வகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் பொய்யான தகவல் அளித்து, எங்களது அனுபவ உரிமையை மறைத்து நிலத்தை பறிக்க முயற்சிக்கின்றனர். எனவே, விவசாய நில அனுபவ உரிமை அடிப்படையில் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.