
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கான நிவாரண நிதி காசோலை வழங்கப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமம் மூப்பனார் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் சவுமியா,14; இவர் கடந்த 10ம் தேதி பூட்டை கிராம எல்லையில் உள்ள ஆற்றில் துணி துவைத்துக்கொண்டிருந்தபோது, வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழிந்த சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறுமியின் குடும்பத்திரை நேரில் சந்தித்து நிவாரண நிதி உதவி காசோலையை வழங்கினார்.
சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், செயலாளர் கதிரவன், தாசில்தார் வைரக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.