/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் நகருக்குள் இரவு நேரத்தில் அரசு பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை
/
தியாகதுருகம் நகருக்குள் இரவு நேரத்தில் அரசு பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை
தியாகதுருகம் நகருக்குள் இரவு நேரத்தில் அரசு பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை
தியாகதுருகம் நகருக்குள் இரவு நேரத்தில் அரசு பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை
ADDED : டிச 10, 2025 06:51 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் நகருக்குள் இரவு நேரத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் வராததால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை வழித்தடத்தில் தியாகதுருகம் முக்கிய நகராக உள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, திருக்கோவிலுார், சங்கராபுரம், பகண்டை கூட்ரோடு ஆகிய ஊர்களை இணைக்கும் மையமாக விளங்குகிறது.
சுற்றுவட்டாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட ஊர்களை சேர்ந்த மக்கள் சேலம், சென்னை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்ல தியாகதுருகம் வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் அதிக அளவில் பயணிகள் இங்கு வருவது வாடிக்கை.
கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் தியாகதுருகம் நகருக்கு சென்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். அதேபோல் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பஸ்களும் நகருக்குள் செல்ல வேண்டும்.
ஆனால் பகலில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், இரவு நேரங்களில் பாயிண்ட் டூ பாயிண்ட் எக்ஸ்பிரஸ் பஸ்களை போல வழிதடத்தில் உள்ள ஊர்களுக்குள் செல்வதை தவிர்த்து விட்டு சில பஸ்கள் நேரடியாக சென்று விடுகின்றன.
இதனால் வெளியூர்களுக்கு செல்வதற்காக இரவு நேரங்களில் காத்திருக்கும் பயணிகள் நள்ளிரவு வரை கொசுக்கடியில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பெரும்பாலான பஸ்கள் தியாகதுருகம் நகருக்குள் வருவதை தவிர்ப்பது வாடிக்கையாக உள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகள் தியாகதுருகம் நகருக்குள் பஸ்கள் சென்று பயணிகளை ஏற்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

