/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை
/
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 17, 2025 06:45 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகளின் கோரிக்கை மனு :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல் அறுவடை துவங்கியுள்ளது. தமிழக அரசு அறிவித்த கொள்முதல் விலை விவசாயிகளுக்கு கிடைத்திட காலதாமதம் செய்யாமல் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.
நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும் மார்கெட் கமிட்டிகளில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து கொண்டு மிக குறைந்த விலையிலேயே நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கு கூட விலை கிடைக்காமல் அவசர தேவைக்கு விற்பனை செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாக்கபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான கொள்முதல் விலை கட்டுபடியானதாக இல்லை.
இருப்பினும் அந்த விலையாகிலும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலதாமதம் செய்யாமல் தேவையான இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம். எம்.குன்னத்துார், திருநாவலுார் ஒன்றியம் ஈஸ்வரகண்டநல்லுார், களமருதுார், ரிஷிவந்தியம் ஒன்றியம் ரிஷிவந்தியம் மற்றும் வாணாபுரம் கூட்ரோடு ஆகிய இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம் என தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி ஆகியோர் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.