
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் செயின்ட் ஜோசப் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 26ம் ஆண்டு மற்றும் சி.பி.எஸ்..இ., பள்ளியின் 4ம் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தாளாளர் ஜோசப் சீனிவாசன் தலைமை தாங்கினார். சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியை பள்ளி முதல்வர் சாராள் ஜோசப் சீனிவாசன் தொடங்கி வைத்தார். ஆசிரியைகள் செல்லம்மாள், மரகதம், அமுதா, கனகா, வனிதா, அர்ச்சனா, பிரியங்கா, சுப ஆனந்தி, கேத்ரின், கணேசன் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்ககப்பட்டது. விழாவில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

