UPDATED : அக் 24, 2026 05:26 PM
ADDED : அக் 24, 2026 05:24 PM

அ நிறம் | அளவு
உளுந்துார்பேட்டை: திருநாவலுாரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., வசந்தவேல் தலைமை தாங்கினார். திருநாவலுார் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கல்பனா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் எலியாஸ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணிகளுக்கு புடவை உள்ளிட்ட 9 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கப்பட்டது. தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு 5 வகையான உணவுப் பரிமாறப்பட்டது.
குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் பஞ்சு, லோகலட்சுமி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
