/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அம்மையகரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
/
அம்மையகரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : நவ 02, 2025 10:13 PM

கள்ளக்குறிச்சி: அம்மையகரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
சின்னசேலம் அடுத்த அம்மையகரத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சவுரிராஜன், சுமதி முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சிவஞானம் வரவேற்றார். கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் பங்கேற்று, கிராமங்களின் வளர்ச்சிக்காக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும், உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டத்தின் நோக்கங்கள் குறித்தும் விளக்கி பேசினார். ஊராட்சி செயலாளர் சந்திரசேகர் வரவு, செலவு கணக்கு விபரங்கள் மற்றும் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், மழைநீர் சேகரிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக் கை பணிகள், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறி த்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், துணை பி.டி.ஓ., ரேணுகாந்தி, ஊராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

