/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களின் முழுமையான நம்பிக்கை பெற்ற ஸ்ரீ ராஜூ இருதயம், தோல் மருத்துவமனை
/
மக்களின் முழுமையான நம்பிக்கை பெற்ற ஸ்ரீ ராஜூ இருதயம், தோல் மருத்துவமனை
மக்களின் முழுமையான நம்பிக்கை பெற்ற ஸ்ரீ ராஜூ இருதயம், தோல் மருத்துவமனை
மக்களின் முழுமையான நம்பிக்கை பெற்ற ஸ்ரீ ராஜூ இருதயம், தோல் மருத்துவமனை
ADDED : அக் 01, 2025 12:48 AM

கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் 24 மணி நேர, ஸ்ரீ ராஜூ இருதயம் மற்றும் தோல் மருத்துவமனை இயங்கி வருகிறது. மாவட்டத்தின் புகழ்பெற்ற டாக்டர் பாபுசக்கரவர்த்தி, தோல் சிகிச்சை முன்னோடி டாக்டர் இந்துபாலா ஆகியோர் மருத்துவமனையை நடத்தி வருகின்றனர்.
பெருநகரங்களுக்கு இணையான தரத்துடனும், அதிநவீன வசதிகளுடனும் இம்மருத்துவமனை இயங்கி வருகிறது.
24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவு, ஐ.சி.யு. வசதி, கேத் லேப், ஆபரேஷன் தியேட்டர், 24 மணிநேர மருந்தகம், அதிநவீன லேசர் உபகரணங்களுடன் தரமான மருத்துவம் கிராமப்புற மக்களும் பெறும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
இம்மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கானோர் மாரடைப்பில் இருந்து உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர். ஆஞ்ஜியோ சிகிச்சையின் மூலம் நேர்மறையான அனுபவமிக்க அணுகுமுறையால் காப்பாற்றியதால், கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதி மக்களுக்கும் அவசர காலத்தில் உயிர்காக்கும் நம்பிக்கையுடன் இம்மருத்துவமனையை தேடி வருகின்றனர்.
தோல் லேசர் சிகிச்சைகள் மற்றும் காஸ்மெட்டாலஜி அழகு சிகிச்சைகளை கள்ளக்குறிச்சியில் கொண்டு வந்து அனுபவமிக்க முழுமையான தோல் சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகிறது.
நாள்பட்ட மனஅழுத்தம் தரக்கூடிய தோல் பிரச்சனைகள், உடல் தோற்றத்தை மேம்படுத்தும் அதி நவீன அழகு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
அதிநவீன முடி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிறப்பு அறுவை சிகிச்சைகளும் திறமை வாய்ந்த மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது.
மாதந்தோறும் கள்ளக்குறிச்சி மாவட்ட கிராமங்களில், இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 3 ஆண்டு அட்வான்ஸ் டிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டண்ட் (செவிலியர் பயிற்சி), 3 ஆண்டு டிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டண்ட் (செவிலியர் பயிற்சி), 2 ஆண்டு டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி (லேப் டெக்னீஷியன் பயிற்சி) ஆகிய இலவச கல்வியும் அளிக்கப்பட்டு வருகிறது.