ADDED : ஆக 30, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நபர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூங்கில்துறைப்பட்டு அ டுத்த புத்திராம்பட்டி கிராமத்தை சேர்ந்த தொப்புளான் மகன் முருகன், 56; மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனர். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த முருகனுக்கு, ஒரு காலில் கட்டை விரல் எடுக்கப்பட்டது. மற்றொரு காலில் கட்டை விரல் அகற்ற வேண்டும் என டாக்டர்கள் கூறியதால், மனம் உலைச்சலில் இருந்தார். வீட்டில் நேற்று முன்தினம் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடபொன்பரப்பி போலீசார் முருகன் உடலை கைப் பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .

