/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
/
அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
ADDED : டிச 16, 2024 05:09 AM
கள்ளக்குறிச்சி : கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகளில் இருந்து உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பெய்த மழையால் கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் நிரம்பின. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மீண்டும் மழை பெய்ததால், அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டது.
ஏற்கனவே, அணைகள் முழு கொள்ளளவில் உள்ளதால், பாதுகாப்பு கருதி நீர்வரத்தாக இருந்த தண்ணீர் ெஷட்டர்கள் வழியாக ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்றைய நிலவரப்படி கோமுகி அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர், கோமுகி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
அதேபோல், சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் ெஷட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

