/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூங்கில்துறைப்பட்டில் தாசில்தார் ஆய்வு
/
மூங்கில்துறைப்பட்டில் தாசில்தார் ஆய்வு
ADDED : நவ 14, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு-: மூங்கில்துறைப்பட்டில் சொந்த இடம் இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான இடம் குறித்து தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.
மூங்கில்துறைப்பட்டில் வசிக்கும் வீடுகள் இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டு மனை வழங்க உள்ள இடத்தினை தாசில்தார் சத்திய நாராயணன் ஆய்வு செய்தார்.
ஆய்வில் பொதுமக்களுக்கு வழங்கும் இடத்தில் பிற்காலத்தில் எவ்வித பிரச்னைகளும் வரக்கூடாது எனவும், பொதுமக்களுக்கு போக்குவரத்து மற்றும் குடிநீர் வசதி கிடைக்கும்படி உள்ள இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், வி.ஏ.ஓ., சரவணன், ஊராட்சி தலைவர் பரமசிவம் உடன் இருந்தனர்.

