/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆசிரியர் தகுதித்தேர்வு: 941 பேர் 'ஆப்சென்ட்'
/
ஆசிரியர் தகுதித்தேர்வு: 941 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 17, 2025 12:11 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த 'டெட்' இரண்டாம் தாள் தேர்வினை 8,299 பேர் எழுதினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29 தேர்வு மையங்களில் 'டெட்' இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்காக விண்ணப்பித்த 9,240 பேர் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மாவட்ட பார்வையாளரும், பள்ளிக்கல்வி இணை இயக்குநருமான ராமகிருஷ்ணன் மேற்பார்வையில், அனைத்து தேர்வு மையங்களிலும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
நேற்று நடந்த தேர்வினை 8,299 பேர் எழுதினர். 941 பேர் தேர்வெழுதவில்லை. 179 மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் அமர்ந்து தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், 26 தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

