UPDATED : நவ 18, 2026 04:33 PM
ADDED : நவ 18, 2026 04:28 PM
அ நிறம் | அளவு
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே மணல் கடத்திய மூன்று மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா உடையானந்தல் ஆற்றுப்பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருநாவலுார் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மணல் கடத்திய மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். மாட்டுவண்டி உரிமையாளர்கள் தப்பியோடி தலைமுறைவாயினர்.
போலீசார் மணல் கடத்திய மூன்று மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
திருநாவலுார் போலீசார் திருநாவலுார் பகுதியைச் சேர்ந்த சங்கு பாலன், 55; மாரியப்பன், 50; குமார், 53; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.
