/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியத்தில் முப்பெரும் விழா
/
ரிஷிவந்தியத்தில் முப்பெரும் விழா
ADDED : நவ 24, 2024 11:22 PM

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியத்தில் தமிழ் சங்க தொடக்க விழா, நேரு மற்றும் கவிஞர் சுரதா பிறந்தநாள் என முப்பெரும் விழா நடந்தது.
ரிஷிவந்தியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க காப்பாளர் முத்தமிழ்முத்தன் தலைமை தாங்கினார். உளுந்துார்பேட்டை முத்தமிழ் சங்க தலைவர் அருணா தொல்காப்பியன் கவி, கம்பன் கழக தலைவர் நல்லாப்பிள்ளை, பொருளாளர் அம்பேத்கர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜகோபால் வரவேற்றார்.
தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்க தலைவர் துரைமுருகன் பெயர் பலகையை திறந்து வைத்தார். தேசத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழறிஞர்கள் பற்றி சிறப்புரையாற்றி, கிராமிய பாடல்கள் பாடப்பட்டது.
நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, குறள் ஒப்புவித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு மூங்கில்துறைப்பட்டு திருவள்ளுவர் அறக்கட்டளை நிறுவனர் விசய்ஆனந்த் பாராட்டு சான்றிதழ், கல்வி உபகரண பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், பல்வேறு தமிழ் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.