/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாடூர் டோல்கேட்டில் மூடிக்கிடக்கும் கழிவறை கட்டடம்; பயணிகள் அவதி
/
மாடூர் டோல்கேட்டில் மூடிக்கிடக்கும் கழிவறை கட்டடம்; பயணிகள் அவதி
மாடூர் டோல்கேட்டில் மூடிக்கிடக்கும் கழிவறை கட்டடம்; பயணிகள் அவதி
மாடூர் டோல்கேட்டில் மூடிக்கிடக்கும் கழிவறை கட்டடம்; பயணிகள் அவதி
ADDED : நவ 02, 2025 11:30 PM

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் டோல்கேட்டில் உள்ள கழிவறை பல மாதங்களாக மூடிக்கிடப்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட துாரம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்காக, சுங்கச்சாவடிகளில் கழிப்பறைகள் அமைத்து, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதி. அதன்படி கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் டோல்கேட்டில் சாலையின் இருபுறமும் ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி, தனி கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கழிப்பறைகள் முறையான பராமரிப்பின்றி, கதவுகள், தண்ணீர் குழாய் ஆகியன உடைந்து பயன்பாடின்றி இருந்தது. இது குறித்து பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்ததால், இருபுறமுள்ள கழிவறைகள் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் மெத்தனப்போக்கினால், கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை மார்க்கம் மாடூர் டோல்கேட் தாண்டி இடதுபுறம் உள்ள கழிப்பறை மூடி கிடக்கிறது.
பணிகள் எதுவும் நடக்காமலேயே பல மாதங்களாக பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு பூட்டி வைத்துள்ளனர். நீண்ட தொலைவிலிருந்து வாகனங்களில் வரும் டிரைவர்கள் மற்றும் பயணிகளின் மூடிக்கிடக்கும் கழிவறைகளை கண்டு, கடும் அதிருப்திக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, வாகனங்களில் வரும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் கழிப்பறைகளை தேடி அலைவது கடும் சங்கடத்தை உருவாக்குகிறது.
கட்டணம் வசூலிப்பதில் ஆர்வம் காட்டும் டோல்கேட் நிர்வாகம், இச்சாலை வழியாக பயணம் செய்யும் டிரைவர்கள்,  பயணிகளின் நிலை கருதி டோல்கேட்டில் மூடிக்கிடக்கும் கழிவறையை உடனடியாக சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

