ADDED : மார் 30, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரத்தில், தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.சங்கராபுரம் அடுத்த நெடுமானுர், சோழம்பட்டு, செட்டியந்துர் மற்றும் கல்வராயமன்மலை கிராமங்களான பாலப்பட்டு,மோட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த மாதம் கிலோ 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி, தற்போது 10 ருபாய்க்கு விற்கப்படுகிறது.
விவசாயிகளிடமிருந்து கிலோ 5 ருபாய்க்கு, தக்காளியை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
இதனால் அறுவடைக்கூலி கூட கட்டுப்படியாகவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.