/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்துக்கு இடையூறு : 2 மினி பஸ்கள் பறிமுதல்
/
போக்குவரத்துக்கு இடையூறு : 2 மினி பஸ்கள் பறிமுதல்
ADDED : ஆக 27, 2025 11:18 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே 'டைமிங்' பிரச்னை தொடர்பாக பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய 2 மினி பஸ்களை போக்குவரத்து துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராம எல்லையில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்கு பணிபுரியும் செவிலியர் உள்ளிட்ட ஊழியர்கள், மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.
மக்கள் வசதிக்காக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு பல்வேறு அரசு பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு, கள்ளக்குறிச்சியில் இருந்து மருத்துவமனைக்கு சென்ற 2 மினி பஸ்களுக்கிடையே 'டைமிங்' பிரச்னை ஏற்பட்டது.
இதனால், அரசு மருத்துவக்கல்லுாரி அருகே 2 மினி பஸ்களும் எதிரெதிர் திசையில் மற்ற வாகனங்கள் செல்லாதபடி சாலையில் நிறுத்தி, 2 டிரைவர்கள் தகராறு செய்தனர். இதனால், பொது போக்குவரத்துக்கும், அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.
இது தொடர்பாக எழுந்த புகாரையடுத்து சாலையை மறித்து தகராறு செய்து கொண்டிருந்த 2 மினி பஸ்களையும் பறிமுதல் செய்யுமாறு கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ பாண்டியன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய், 2 மினிபஸ்களையும் பறிமுதல் செய்தார்.