/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
கல்வராயன்மலையில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு பயிற்சி
கல்வராயன்மலையில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு பயிற்சி
கல்வராயன்மலையில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 03, 2025 11:36 PM

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமினை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை மற்றும் அகரம் பவுண்டேஷன் சார்பில் கல்வராயன்மலை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் தற்காலி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி மற்றும் அனைத்து பாடங்களுக்கான கற்றல் கற்பித்தல் பயிற்சி, இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் பயிற்சியை துவக்கி வைத்தார். இதில் மலைவாழ் உண்டு உறைவிட, ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளி தற்காலி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது;
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்வராயன்மலை விவசாயிகளுக்கு வேளாண், தோட்டக்கலை, கால்நடை துறை உள்ளிட்ட பல்வேறு துறை மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் அடுத்த தலைமுறையினர் முன்னேற்றுவதற்கான கல்வி மேம்பாட்டிற்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அதன்படி கல்வராயன்மலை ஒன்றியத்தில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பொது பயிற்சி மற்றும் பாட வாரியான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர் இடத்திலிருந்து தொடர்ந்து நல்வழி காட்ட வேண்டும். மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை முதலில் ஆழமாக கற்பிக்க வேண்டும். பள்ளி பருவத்தில் ஒழுக்கம், கல்வி, சமூக இணைப்பு ஆகியவற்றை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இப்பயிற்சியினை ஆசிரியர்கள் முழுமையாக கற்றுக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்க வேண்டும் என்றார்.