ADDED : நவ 16, 2026 04:56 PM

கச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் குட்கா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கரியாலூர் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா தலைமையிலான போலீசார், இன்று (நவ.,16) கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சாக்கு மூட்டையுடன் பைக்கில் வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. குட்கா கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ராஜா, 46; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர், குட்கா பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்ய எடுத்து வந்தது தெரிய வந்தது. மேலும், அதனை, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னன் மகன் மாரிமுத்து, 40, என்பவரிடம் வாங்கி வந்ததும் தெரிந்தது. இது குறித்து வழக்கு பதிந்த கரியாலூர் போலீசார், ராஜா மற்றும் மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 8 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
