/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்தாண்டார்கோவில் பள்ளி வகுப்பறை ரூ. 10 லட்சம் மதிப்பில் சீரமைப்பு

ADDED : டிச 13, 2025 06:41 AM

கள்ளக்குறிச்சி: உளுந்தாண்டார்கோவில் பள்ளியில் 10 லட்சம் மதிப்பீட்டில் நடக்கும் சீரமைப்பு பணிகளை நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.
உளுந்துார்பேட்டை நகராட்சி, உளுந்தாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இருந்தது. மழையின்போது, வகுப்பறை கட்டடத்தில் மழைநீர் ஒழிகியது. இதனால் மாணவர்கள் தரையில் அமர முடியாமல் சிரமப்பட்டனர். 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மாற்று வகுப்பறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் சார்பில் கல்வித்துறைக்கு முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக தினமலரில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்து, பள்ளி வகுப்பறையை சீரமைக்க ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புனரமைப்பு பணிகள் தரமாக நடக்கிறதா என்பதை நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு நேற்று ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி பொறியாளர் தேவநாதன், நகராட்சி கவுன்சிலர் ராஜவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.