தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பராமரிப்பின்றி பாழாகும் பயணிகள் நிழற்கூடம்

பராமரிப்பின்றி பாழாகும் பயணிகள் நிழற்கூடம்

பராமரிப்பின்றி பாழாகும் பயணிகள் நிழற்கூடம்


UPDATED : அக் 24, 2026 01:10 AM

ADDED : அக் 24, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 01:10 AM ADDED : அக் 24, 2026 01:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு நான்குமுனை சந்திப்பில் உள்ள பயணிகள் காத்திருப்போர் கூடம் முறையாக பராமரிப்பு இல்லாததால் பாழாகி வருகிறது.

மூங்கில்துறைப்பட்டு நான்குமுனை சந்திப்பில் கடந்த 2022–23ம் ஆண்டு தி.மு.க., சார்பில் பயணிகள் காத்திருப்போர் கூடம் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் அனைத்து நாற்காலிகளும் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் மது அருந்தும் இடமாகவும், உள்ளது. இதனால், பஸ் நிறுத்தத்தில் பயணிகள் காத்திருந்த பஸ் ஏற அச்சமடைகின்றனர்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள் பயணிகள் நிழற்கூடத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us