/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
/
ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
ADDED : அக் 03, 2025 11:31 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியுடன் மாணவர் சேர்க்கை நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் ஜனனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விஜயதசமி பண்டிகையொட்டி பள்ளியில் கே.ஜி., வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் புதிதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுடன் அமர வைத்து, பாரம்பரிய முறையில் நெல் மணியில் அ, ஆ எழுத்துக்களை எழுதி பள்ளி கல்வியை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி, துணை முதல்வர் பாபு மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.