/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
/
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
ADDED : மே 21, 2025 11:45 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் கடைவீதி, மேல் அக்ரஹார தெரு, சேலம் சாலை, காந்தி சாலையோரங்கள் அனைத்தும், தள்ளு வண்டி கடைகள், பழக்கடைகள், அணிவகுத்து நிற்கும் வாகனங்கள், ஆட்டோக்கள் என ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. பெரும்பாலான கடைக்காரர்கள் கடையில் இருந்து பொருட்களை வெளியே வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த காய்கறி மார்க்கெட் மற்றும் பிற சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.