ADDED : செப் 28, 2025 03:53 AM

சின்னசேலம், சின்னசேலத்தில் கார் மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலே இறந்தார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், தென்குமரை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 60; இவரது மனைவி பெரியம்மாள், 55; இருவரும் சின்னசேலம் அடுத்த பாண்டியங்குப்பம் கிராமத்திற்கு ஜாதகம் பார்க்க சென்றனர்.
நேற்று மாலை 4:00 மணிக்கு, பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பினர்.
சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில்பாடி சர்வீஸ் சாலை அருகே சாலையை கடக்க முயன்றனர். அப்போது, கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற விழுப்புரத்தைச் சேர்ந்த பாரதிராஜா ஓட்டி வந்த இன்னோவா கார் பைக் மீது மோதியது. பைக்கில் வந்த இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் பெரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த சின்னசேலம் போலீசார் பெரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.