/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாவட்டத்திற்கு ரூ.20.65 கோடி.. நிதி விடுவிப்பு! ஊரக வளர் ச்சி திட்ட பணிகள் சுறுசுறுப்பு
/
காஞ்சி மாவட்டத்திற்கு ரூ.20.65 கோடி.. நிதி விடுவிப்பு! ஊரக வளர் ச்சி திட்ட பணிகள் சுறுசுறுப்பு
காஞ்சி மாவட்டத்திற்கு ரூ.20.65 கோடி.. நிதி விடுவிப்பு! ஊரக வளர் ச்சி திட்ட பணிகள் சுறுசுறுப்பு
காஞ்சி மாவட்டத்திற்கு ரூ.20.65 கோடி.. நிதி விடுவிப்பு! ஊரக வளர் ச்சி திட்ட பணிகள் சுறுசுறுப்பு
ADDED : பிப் 04, 2025 12:55 AM
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு, 20.65 கோடி ரூபாய் நிதியை, அரசு விடுவித்துள்ளது. இதில், 208 பணிகளும் சுறுசுறுப்புடன் துவங்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
தலா ஒவ்வொரு ஊராட்சிக்கும், 30 லட்சம் ரூபாய் கிராம வளர்ச்சி நிதி, குக்கிராம வளர்ச்சி நிதி மற்றும் மக்கள் தொகை அடிப்படை நிதி என, மூன்று நிதிகள் சேர்த்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - -2 நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த நிதி பெறுவதற்கு, ஆண்டுதோறும் தலா, 55 ஊராட்சிகளை தேர்வு செய்து, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், சாலைகள், நெற்களங்கள், செடிகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணியை, ஊரக வளர்ச்சி துறை செய்து கொடுக்கிறது.
கடந்த, 2021 - 22ம் நிதி ஆண்டு, 55 ஊராட்சிகளுக்கு, 23.96 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, 2022 - 23ம் நிதி ஆண்டு, 55 ஊராட்சிகளை தேர்வு செய்து, 21.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, 2023 - 24ம் நிதி ஆண்டிற்கு, 55 ஊராட்சிகளை தேர்வு செய்து, 20.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து வருகின்றனர்.
இதில், கட்டடங்கள் புதுப்பிக்கும் பணி மற்றும் நெற்களங்கள் கட்டிக்கொடுக்கும் பணிகள் ஆக்கப்பூர்வமாக உள்ளன.
கடந்த ஆண்டு, 2024 - 25ம் ஆண்டிற்கு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 55 ஊராட்சிகள் தேர்வாகி இருந்தன.
இந்த ஊராட்சிகளில், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலக கட்டடம், ரேஷன் கடை கட்டடம் என, பல்வேறு பணிகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன.
இதற்கு, 20.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, 208 பணிகளை ஊரக வளர்ச்சி துறையினர் தேர்வு செய்திருந்தனர்.
இந்த பணிகளுக்கு, லோக்சபா தேர்தலுக்கு முன் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. பணி ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு நிதி சென்றடையவில்லை.
இதனால், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளின் கட்டுமானத்தில், ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் சுணக்கம் காட்டி வந்தனர்.
சமீபத்தில், தமிழகம் முழுதும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு, பல கோடி ரூபாய் அரசு நிதியை விடுவித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 20.65 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. இந்த நிதிகளின் அடிப்படையில், வளர்ச்சி பணிகள் சுறுசுறுப்புடன் செய்யப்படும் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு, 55 ஊராட்சிகள் தேர்வாகி, 20.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், 208 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்காததால், பல ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் செய்யாமல் இருந்தனர்.
தற்போது, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இனி, அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் சுறுசுறுப்படையும்.
இவ்வாறு அவர் கூறினார்.