/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
56 மையங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு 28,305 மாணவ -- மாணவியர் பங்கேற்பு
/
56 மையங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு 28,305 மாணவ -- மாணவியர் பங்கேற்பு
56 மையங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு 28,305 மாணவ -- மாணவியர் பங்கேற்பு
56 மையங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு 28,305 மாணவ -- மாணவியர் பங்கேற்பு
ADDED : மார் 02, 2025 12:32 AM
காஞ்சிபுரம், தமிழகம் முழுதும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் நாளை துவங்கி, 25ம் தேதி நிறைவு பெறுகின்றன. அதேபோல, பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 5ம் தேதி துவங்கி, 27ம் தேதி நிறைவு பெறுகின்றன.
இவற்றுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் முடிந்த நிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்கு, அந்தந்த பள்ளிகள் வாயிலாக ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என, மொத்தம் 107 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளை சேர்ந்த மாணவ - மாணவியருக்கு, மொத்தம் தலா, 56 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பில், மொத்தம் 13,927 பேர் அரசு பொதுத் தேர்வுகள் எழுத உள்ளனர்.
அதேபோல, பிளஸ் 1 தேர்வில் மொத்தம் 14,378 பேர் பிளஸ் 1 தேர்வுகள் எழுத உள்ளனர். பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்பு தேர்வுகளுக்கு தலா, 56 மையங்களுக்கும் தேர்வுத்துறை சார்பில் அதிகாரிகளும், பாதுகாப்பு பணிக்கு போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இம்மையங்களுக்கு 80 பறக்கும் படையினரும், மூன்று இடங்களில் வினாத்தாள் காப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களுக்கு, 12 வழித்தடங்களில் சரியான நேரத்திற்கு வினாத்தாள் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக,மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.