/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைதீர் கூட்டத்தில் 414 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 414 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 02, 2024 10:18 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 414 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, கலெக்டர் பங்களா பின்புறம் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கை, கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரந்துார் ஊராட்சியில், துணை தலைவர் நித்யா என்பவர், வளர்ச்சி பணிகளில் தலையிட்டு தடை செய்வதாகவும், வார்டு உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என, பரந்துார் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குறைதீர் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், திட்ட இயக்குனர் ஆர்த்தி உட்பட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.