/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வயலில் கிடக்கும் மினி டேங்க் எடையார்பாக்கத்தில் அவலம்
/
வயலில் கிடக்கும் மினி டேங்க் எடையார்பாக்கத்தில் அவலம்
வயலில் கிடக்கும் மினி டேங்க் எடையார்பாக்கத்தில் அவலம்
வயலில் கிடக்கும் மினி டேங்க் எடையார்பாக்கத்தில் அவலம்
ADDED : பிப் 22, 2025 01:18 AM

எடையார்பாக்கம்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் எடையார்பாக்கம் கிராமத்தில், ஏரிக்கரை மீது கொம்மாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
எடையார்பாக்கம், அக்கமாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் இக்கோவிலுக்கு செல்வோர், இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள குடிநீரை பயன்படுத்தி வந்தனர். ஓராண்டாக சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து, வயல்வெளியில் கேட்பாரற்று கிடக்கிறது.
மேலும், ஆழ்துளை கிணற்றிற்கு செல்லும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அக்கமாபுரம் கிராமத்திற்கு செல்வோர், குடிநீர் தாகம் தீர்க்க ஏரி நீரை குடிக்க வேண்டியுள்ளது.
எனவே, எடையார்பாக்கம் கிராமத்தில், சேதமடைந்த சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.