/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாகேஸ்வரி அம்மனுக்கு ஆடி திருவிழா
/
நாகேஸ்வரி அம்மனுக்கு ஆடி திருவிழா
ADDED : ஆக 24, 2024 12:36 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு, கவரை தெருவில் உள்ள நாகேஸ்வரி அம்மன் கோவிலில், 31வது ஆண்டு ஆடி திருவிழா, கடந்த 18ம் தேதி காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கியது.
நேற்று முன்தினம், காலை 10:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர்.
இரவு 9:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நாகேஸ்வரி அம்மன், கவரை தெரு, குறுக்கு கவரை தெரு. சவுராஷ்டிரா தெரு, பள்ளத்தெரு, சின்ன வேப்பங்குளக்கரை, பாலநடன விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெரு வழியாக வீதியுலா வந்தார்.
இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது. நேற்று, காலை 11:00 மணிக்கு சீர்கஞ்சி வார்த்தல் நடந்தது. இன்று, இரவு 10:00 மணிக்கு கூத்து நடைபெறுகிறது.