/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் நெல்லுக்கு கூடுதல் விலை; காத்திருந்து விவசாயிகள் கொள்முதல்
/
காஞ்சியில் நெல்லுக்கு கூடுதல் விலை; காத்திருந்து விவசாயிகள் கொள்முதல்
காஞ்சியில் நெல்லுக்கு கூடுதல் விலை; காத்திருந்து விவசாயிகள் கொள்முதல்
காஞ்சியில் நெல்லுக்கு கூடுதல் விலை; காத்திருந்து விவசாயிகள் கொள்முதல்
ADDED : செப் 03, 2024 05:52 AM

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், சொர்ணவாரி பருவத்திற்கு சாகுபடி செய்த நெல் பயிர்களை ஒரு மாதமாக விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
அறுவடை செய்த நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து விற்பனை செய்கின்றனர்.
இதனிடையே, 2024- - 25ம் ஆண்டுக்கான, மாநில அரசின் நெல் ஊக்கத்தொகை அறிவிப்பு, கடந்த ஜூன் மாதம் வெளியானது. அதன்படி, 100 கிலோ கொண்ட சாதாரண மோட்டா ரக நெல் குவின்டால் ஒன்றுக்கு, 105 ரூபாயும், சன்ன ரக நெல் குவின்டால் ஒன்றுக்கு, 130 ரூபாயும் கூடுதல் ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று முன்தினம் முதல், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யும் நெல்லுக்கு சாதாரண மோட்டா ரக நெல் குவின்டால் ஒன்றுக்கு 2,405 ரூபாயும், சன்ன ரக நெல் குவின்டால் ஒன்றுக்கு, 2,450 ரூபாயுய் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இதற்காக, 10 நாட்களுக்கு முன், அறுவடை செய்த நெல்லையும், விவசாயிகள் சிலர் காத்திருந்து நேற்று முன்தினம் முதல் கொள்முதல் செய்ய துவங்கி உள்ளனர்.
இதனிடையே, சொர்ணவாரி பருவத்திற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த பல விவசாயிகளுக்கு, இன்னும் அதற்கான பணம் பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது.
அம்மாதிரியான விவசாயிகள், தங்களுக்கும் மாநில அரசின் ஊக்கத்தொகையை சேர்த்து வழங்க வேண்டும் என எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள்சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் நேரு கூறியதாவது:
விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு மத்திய அரசின் ஆதார விலையோடு சேர்த்து, மாநில அரசின் ஊக்கத்தொகை கிடைத்திருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனினும், சில தினங்களுக்கு முன்பாக நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு இந்த சலுகை கிடைக்காது என்பது, அவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
எனவே, நடப்பாண்டு சொர்ணவாரி பட்டத்திற்கான நெல் கொள்முதல் துவக்கப்பட்ட நாள் கணக்கிட்டு, அதுமுதல் நெல் கொள்முதல் செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மாநில அரசின் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.