/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருந்துகளை இருப்பு வைக்க மருத்துவர்களுக்கு அறிவுரை
/
மருந்துகளை இருப்பு வைக்க மருத்துவர்களுக்கு அறிவுரை
மருந்துகளை இருப்பு வைக்க மருத்துவர்களுக்கு அறிவுரை
மருந்துகளை இருப்பு வைக்க மருத்துவர்களுக்கு அறிவுரை
ADDED : ஆக 16, 2024 11:38 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு இடங்களில், கலெக்டர் கலைச்செல்வி நேற்று ஆய்வு செய்தார். செவிலிமேடு நலவாழ்வு மையத்திற்கு நேற்று காலை சென்ற கலெக்டர் கலைச்செல்வி, சிகிச்சைக்கு வந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அங்குள்ள மருந்தகத்தில் உள்ள மருந்துகளை பார்வையிட்டு இருப்பு பதிவேட்டை ஆய்வு செய்தார். மருத்துவர்களிடம், அனைத்து நோய்களுக்கான மருந்துகளை கையிருப்பு வைக்கும்படி கேட்டுக் கொண்டார். மருத்துவமனை வளாகத்தை துாய்மையாக வைக்க அறிவுறுத்தினார்.
இதையடுத்து, பல்லவன் நகர் ரேஷன் கடையை பார்வையிட்டவர் அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பை ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு பொருட்கள் தாமதமின்றி வழங்க அறிவுரை வழங்கினார்.