/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு
/
வாலாஜாபாத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஆக 22, 2024 06:39 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத்தில், விதைகள் தன்னார்வலர் அமைப்பு மற்றும் பாலாறு அரிமா சங்கம் இணைந்து, நெகிழி ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை வழங்குதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், திருவேனி அகடமி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆதி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று நெகிழி ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி அப்பகுதி முக்கிய விதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
நெகிழியை கை விடு, பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீரு, பூமித்தாய்க்கு கண்ணீரு.. பிளாஸ்டிக் நெகிழி பொருட்களை ஒழிப்போம், மஞ்சள் பை பயன்படுத்துவோம் என, பேரணியின் போது கோஷமிட்டனர்.
நிறைவாக வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில், 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டு, பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், மஞ்சப்பை பயன்படுத்துதல் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.