/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டாஸ்மாக் விற்பனை கண்காணிக்க துறை ரீதியான அதிகாரிகள் நியமனம்
/
டாஸ்மாக் விற்பனை கண்காணிக்க துறை ரீதியான அதிகாரிகள் நியமனம்
டாஸ்மாக் விற்பனை கண்காணிக்க துறை ரீதியான அதிகாரிகள் நியமனம்
டாஸ்மாக் விற்பனை கண்காணிக்க துறை ரீதியான அதிகாரிகள் நியமனம்
ADDED : ஆக 22, 2024 06:46 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில், 93 மதுபானக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. மது மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஜூலை மாதம் விற்பனை மந்தமாக இருந்தது. இதனால், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, வருவாய் குறைந்துள்ளன. இதை, ஊக்குவிக்கும் விதமாக, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களுக்கு, ஆக., 5 சதவீதம் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என, டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதை கண்காணிக்க, தாலுகா வாரியாக கண்காணிப்பு அதிகாரிகாரிகளை அத்துறை நிர்வாகம் நியமித்து உள்ளது.