/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காமாட்சி அம்மனுக்கு பால்குட விழா
/
காமாட்சி அம்மனுக்கு பால்குட விழா
ADDED : மார் 25, 2024 06:03 AM

காஞ்சிபுரம், : திருத்தணி தொண்டை மண்டல வேளாளர் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் காமாட்சியம்மன் பிறந்த பூரம் நட்சத்திரத்தையொட்டி, காஞ்சி காமாட்சியம்மனுக்கு 108 பால்குட விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 17வது ஆண்டு 108 பால்குட விழா நேற்று நடந்தது.
மாநில தலைவர் எல்லப்பன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் காந்தி சாலை வழக்கறுத்தீசுவரர் கோவிலில் இருந்து, 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டது. ராஜ வீதி வழியாக காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஊர்வலம் வந்து சேர்ந்தது.
அதை தொடர்ந்து, காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. விழாவில் காஞ்சிபுரம் அனைத்து முதலியார் சங்க மாநிலத் தலைவர் எழிலன் மற்றும் தொண்டை மண்டல வேளாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

