/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கரா கல்வி குழும ஆசிரியர்கள் காஞ்சி விஜயேந்திரரிடம் ஆசி
/
சங்கரா கல்வி குழும ஆசிரியர்கள் காஞ்சி விஜயேந்திரரிடம் ஆசி
சங்கரா கல்வி குழும ஆசிரியர்கள் காஞ்சி விஜயேந்திரரிடம் ஆசி
சங்கரா கல்வி குழும ஆசிரியர்கள் காஞ்சி விஜயேந்திரரிடம் ஆசி
ADDED : மே 17, 2024 12:23 AM

காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும் உள்ள சங்கரா கல்வி குழுமத்தில் பணியாற்றும் 75க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று காஞ்சி சங்கரமடம் வந்தனர். மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் வழிபாடு செய்தனர்.
அதை தொடர்ந்து, ஆசிரியர்கள் அனைவருக்கும் காஞ்சி காமகோடி பீடாதிபதி, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.
சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலைகழக துணைவேந்தர் சீனிவாசு ஏற்பாட்டின் நடந்த இந்நிகழ்ச்சியில், சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகாரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி சங்கரா பல்கலை முதல்வர் கே வெங்கட்ரமணன் மற்றும் பேராசிரியர்கள் பல்கலை அலுவலக ஊழியர்கள் உடனிருந்தனர்.
மாணவியருக்கு ஆசி
ஸ்ரீகாஞ்சி க்ஷேத்ர கலா மந்திர், பரதநாட்டிய பயிற்சி பள்ளியில் பயின்று, அரங்கேற்றம் நிறைவு செய்த மாணவியர், நடன பள்ளியின் இயக்குனர் மீனா, மேலாளர் வஜ்ஜிரம், நடன ஆசிரியர், மற்றும் தங்களது பெற்றோருடன், காஞ்சிபுரம் சங்கரமடத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசி பெற்றனர்.

