/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கரா பல்கலையில் ரத்த தான முகாம்
/
சங்கரா பல்கலையில் ரத்த தான முகாம்
ADDED : மார் 25, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் சங்கரா பல்கலை மற்றும் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை இணைந்து, நேற்று, ரத்த தான முகாம் நடத்தின.
இந்த முகாமிற்கு, சங்கரா பல்கலை நாட்டு நலப் பணிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.
ஆயுர் வேத மருத்துவர் சாய்நாதன் ரத்ததான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், 50க்கும் மேற்பட்ட நாட்டு நலப் பணி திட்ட தன்னார்வலர்கள் ரத்த தானம் அளித்தனர். நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

