/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செயல்பாடின்றி வீணாகும் சாலவாக்கம் வாரச் சந்தை கட்டடம்
/
செயல்பாடின்றி வீணாகும் சாலவாக்கம் வாரச் சந்தை கட்டடம்
செயல்பாடின்றி வீணாகும் சாலவாக்கம் வாரச் சந்தை கட்டடம்
செயல்பாடின்றி வீணாகும் சாலவாக்கம் வாரச் சந்தை கட்டடம்
ADDED : செப் 01, 2024 01:58 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில், வெள்ளிக் கிழமைதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. சந்தை இயங்கும் பகுதியைச் சுற்றிலும், குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன.
இதனால்,சந்தை செயல்படும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோரும் அவதிக்குள்ளாகினர்.
இதனால், வார சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற சாலவாக்கம் சுற்றுவட்டார பகுதியினர் வலியுறுத்தினர்.
இக்கோரிக்கையை ஏற்று, சாலவாக்கம்- - இடையாம்புதுார் சாலையில், அரசு நெல் கொள்முதல் நிலையம் அருகே, புதிதாக வாரச்சந்தை அமைக்க ஊராட்சி நிர்வாகம் தீர்மானித்தது.
அதன்படி, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 41 லட்சம் ரூபாய் செலவில் வாரச்சந்தைகட்டடம் ஏற்படுத்தி, கடந்த ஆண்டு திறப்பு விழா நடந்தது.
அதைத்தொடர்ந்து இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் அக்கட்டடம் வீணாகி வருகிறது.
இப்பகுதி வாரச்சந்தை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரஅப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சாலவாக்கம் ஊராட்சி நிர்வாகிஒருவர் கூறியதாவது:
சாலவாக்கம் பஜார் வீதிக்கும், புதிதாக கட்டி உள்ள வாரச்சந்தைபகுதிக்கும் ஒரு கி.மீ., துாரம் இடைவெளிஉள்ளது.
இதனால், காய்கறி உள்ளிட்டவை வாங்க சாலவாக்கத்தில் இருந்து சந்தைக்கு மக்கள் கூட்டம் அதிகம் வராது என, அங்கு கடை வைக்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
விரைவில் அந்தகட்டடம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்,
இவ்வாறு அவர்கூறினார்.