/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் சதுர்த்தி விழா எதிரொலி விநாயகர் கோவில்கள் புதுப்பொலிவு
/
காஞ்சியில் சதுர்த்தி விழா எதிரொலி விநாயகர் கோவில்கள் புதுப்பொலிவு
காஞ்சியில் சதுர்த்தி விழா எதிரொலி விநாயகர் கோவில்கள் புதுப்பொலிவு
காஞ்சியில் சதுர்த்தி விழா எதிரொலி விநாயகர் கோவில்கள் புதுப்பொலிவு
ADDED : செப் 04, 2024 11:52 PM

காஞ்சிபுரம்:விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவதற்காக சின்ன காஞ்சிபுரம், நசரத்பேட்டை, கன்னிகாபுரம், முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் 1 -- 10 அடி வரையிலான பல வடிவங்களில் காகித கூழால் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
அதேபோல, வீட்டில் வழிபாடு நடத்துவதற்கான களிமண் விநாயகர் கிலைகளும், விநாயகர் குடைகள் தயாரிக்கும் பணியும் காஞ்சிபுரம் வட்டாரத்தில் நடந்து வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களும் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. இதில், கோவில் கோபுரம், விமான கலசம், பிரதான நுழைவாயில், உட்புற கதவு, மூலவர் சன்னிதி கதவு, சுற்றுச்சுவர் பகுதி என, கோவில் வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால், காஞ்சிபுரத்தில் உள்ள விநாயகர் கோவில்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இதனால், காஞ்சிபுரத்தில், வர்ணம் தீட்டும் தொழிலாளர்கள,் ‛பிஸியாகி' வருகின்றனர்.