/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
55 மசாஜ் சென்டர்களுக்கு சென்னை போலீஸ் 'சீல்?'
/
55 மசாஜ் சென்டர்களுக்கு சென்னை போலீஸ் 'சீல்?'
ADDED : மே 07, 2024 09:27 PM
சென்னை:கோயம்பேடு, அண்ணா நகர் பகுதியில் உரிமம் இன்றி சட்ட விரோதமாக இயங்கி வந்த மசாஜ் சென்டர், ஸ்பாக்களுக்கு, காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில், உரிமம் இன்றி சட்ட விரோதமாக மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்கள் இயங்கி வருவதாக, புகார் எழுந்தது.
இதையடுத்து, அப்பகுதி முழுதும் காவல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், 55 மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்கள், உரிமம் இன்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அவற்றை மூட உத்தரவிட்ட காவல் துறையினர், உரிய அனுமதி பெற்ற அவற்றை இயக்க வேண்டும் என, எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
குறிப்பாக அண்ணாநகர் பகுதியில், உரிமம் இன்றி இயங்கி வந்த, எட்டு ஸ்பாக்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

