/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதல்வர் விளையாட்டு போட்டிகள் காஞ்சிபுரத்தில் நாளை துவக்கம்
/
முதல்வர் விளையாட்டு போட்டிகள் காஞ்சிபுரத்தில் நாளை துவக்கம்
முதல்வர் விளையாட்டு போட்டிகள் காஞ்சிபுரத்தில் நாளை துவக்கம்
முதல்வர் விளையாட்டு போட்டிகள் காஞ்சிபுரத்தில் நாளை துவக்கம்
ADDED : செப் 09, 2024 11:29 PM
காஞ்சிபுரம் : முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 பிரிவுகளுக்கு நாளை முதல், 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஐந்து பிரிவுகளின் கீழ், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில், தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல், கபடி, சிலம்பம், மேசைபந்து, கேரம் உள்ளிட்ட 14 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன.
இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க முடியும். அனைத்து விளையாட்டு போட்டிகளும், காலை 7:00 மணிக்கு துவங்கும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு, 74017 03481 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.