/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரிவர்த்தனை மேற்கொள்ளாத 40 இ- - சேவை மையங்கள் மூடல்
/
பரிவர்த்தனை மேற்கொள்ளாத 40 இ- - சேவை மையங்கள் மூடல்
பரிவர்த்தனை மேற்கொள்ளாத 40 இ- - சேவை மையங்கள் மூடல்
பரிவர்த்தனை மேற்கொள்ளாத 40 இ- - சேவை மையங்கள் மூடல்
ADDED : ஆக 15, 2024 08:01 PM
காஞ்சிபுரம்:தமிழக மின் ஆளுமை முகமை வாயிலாக, இ- - சேவை மையங்களில், பட்டா மாற்றம், ரேஷன் அட்டை விண்ணப்பம் செய்வது, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் முறை பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளன.
இந்த இ- - சேவை மையங்கள், தனியார், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிடமும், கிராம வறுமை ஒழிப்பு குழுவிடம் இருந்தன.
இந்நிலையில், ஏராளமான தனியார் இ- - சேவை மையங்கள் துவங்குவதற்கான அறிவிப்பு கடந்தாண்டு வெளியானதால், பலரும் புதிதாக இ- - சேவை மையங்கள் துவக்கினர்.
அவ்வாறு, துவங்கிய பல இ- - சேவை மையங்களில், பலரும் மையங்களை நடத்தாதலும், எந்தவித பரிவர்த்தனையை மேற்கொள்ளாததாலும், பல இ - -சேவை மையங்களை மின் ஆளுமை முகமை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கேபிள் டிவி நிறுவனத்திடம் 6, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிடம் 35, கிராம வறுமை ஒழிப்பு குழுவிடம் 42, தனியாரிடம் 35, கிராம அளவிலான தொழில் முனைவோரிடம் 8 என, 91 இ- - சேவை மையங்கள் இயங்கி வந்தன.
கடந்தாண்டு தனியார் இ- - சேவை மையங்கள் துவங்க அனுமதி அளித்ததன்படி, 406 பேர், மின் ஆளுமை முகமையிடம் இ- - சேவை மையம் துவங்குவதற்கான கணக்குகள் துவங்கி, ஐடி, பாஸ்வேர்ட் போன்றவை பெற்றிருந்தனர்.
ஆனால், மையங்கள் துவங்காமலும், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிட்டு பரிவர்த்தனை மேற்கொள்ளாமலும் பலரும் இருந்துள்ளனர்.
மின் ஆளுமை முகமை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இவை தெரியவந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40 பேர், எந்தவித பரிவர்த்தனையும் மேற்கொள்ளாததால், அவர்களிடம் விளக்கம் கேட்டு, அந்த 40 இ- - சேவை மையங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
கடந்தாண்டு புதிதாக துவங்கிய 406 மையங்களில், 366 மையங்கள் தொடர்ந்து இயங்குகின்றன. புதிதாக துவங்கிய 366 மற்றும் ஏற்கனவே இயங்கி வந்த 91 என, 457 இ- - சேவை மையங்கள், மாவட்டம் முழுதும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.