/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதல்வர் கோப்பை போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
/
முதல்வர் கோப்பை போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 20, 2024 11:52 PM
காஞ்சிபுரம்:தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 2024ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், புதிதாக ஏராளமான விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் நடத்தப்பட உள்ளன.
மாவட்ட, மண்டலமற்றும் மாநில அளவிலானமுதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 - 19 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கும், 17 - 25 வயது வரையிலான கல்லுாரி மாணவர்களுக்கும், 15 - 35 வயது வரையிலான பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டிகளில்பங்கேற்க http://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து, அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்யலாம்.
இதற்கான முன்பதிவு வரும் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இணையதளம் வாயிலாக பதிவு செய்தோர் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும் விபரங்களுக்கு, 95140 00777 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.