/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் வழித்தடத்தில் இடையூறாக வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்
/
மின் வழித்தடத்தில் இடையூறாக வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்
மின் வழித்தடத்தில் இடையூறாக வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்
மின் வழித்தடத்தில் இடையூறாக வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்
ADDED : ஆக 24, 2024 12:34 AM

மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த, கண்ணன்தாங்கல் முதல், ஏகனாபுரம், பரந்துார் வரையில், மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலையோரம் மின் வழித்தடம் செல்கிறது.
ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து, மேலேரி வரையில், தெரு விளக்கு, மும்முணை மின் இணைப்பு செல்கின்றன. இந்த மின் வழித்தடத்தில் செல்லும் மின் கம்பி மீது, காட்டு செடிகள் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டிக் காணப்படுகின்றன.
இதனால், அடிக்கடி தெருவிளக்கு, வீட்டிற்கு செல்லும் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுகிறது. மேலும், மின்சாதனப் பொருட்களை முறையாக பயன்படுத்த முடியவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் வழித்தடத்தில் இடையூறாக இருக்கும் காட்டு செடிகள் மற்றும் சீமைக் கருவேலங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.